Tuesday, October 26, 2010

இதுவும் ஒரு காதல் கதை


யாழ்ப்பாணத்திலே லெவல் கணிதப் பிரிவில்படித்துக்கொண்டிருக்கும் இந்த கதையின் ஹீரோ ரூபன் சுமாரான நிறமும் அப்பாஸைப் போன்ற முகவெட்டும் கொண்டவன்
U.K ல் இருந்து அண்ணன் கஸ்டப்பட்டு அனுப்பும் பணத்தை பல்சர் மோட்டார்பைக்கிலும் விலையுயர்ந்த 3ஜி போன் வாங்குவதிலும் செலவு செய்யும் சராசரி யாழ்ப்பாணத்து இளைஞன். அரும்பு மீசையுடனும் பல்சருடனும் science hall போவதற்காக நண்பன் தினேஸுக்காகக் காத்திருந்தான். “புதிய மனிதா……..!பூமிக்கு வா….!!” ரூபனின் செல் ரிங்கிற்று. ‘சொறி! மச்சான் ! எனக்கு ஒரு அவசர அலுவலடா! Physics ற்கு வாறன் ! நீ போ மச்சான்தினேஸ் தான் போனில.ரூபனும் கிக்கரை உதைக்க பல்சரும் பரலோகவேகம் கொண்டது. Science hall சந்தியில் எதிரே இருந்து ஒரு சைக்கிள் வந்த்தைக் கண்டு சுதாரித்து சடன் பிறேக் போட்டதால் பல்சரும் மயிரிழையில் மோதலைத்தவித்து நின்றது.”Oh! My god!! “ என்ற இனிமையான குரலைக் கேட்டு நிமிர்ந்த ரூபன் அந்த சைக்கிள் தேவதையைக் கண்டு திகைத்தான்.
அழகின் மொத்தம் நீயா!!!!!!!!”” பாடலை ஒருதடவை ஹம் பண்ணத்தோன்றியது.மனசுக்குள்ளே ஒரு நிமிடம் அந்தக்கால இளையராஜாவில் இருந்து தற்போதைய ரகுமான் வரை எல்லோருடைய காதல் மெட்டுக்களும் வந்து போயின. “சொறி நான் தான் ரோங் சைட்டில வந்தனான்என்ற வார்த்தைகள் அவனை நனவுலகத்திற்கு கொண்டு வந்தன.தொடர்ந்து “Science hall எங்க இருக்கு எண்டு சொல்ல முடியுமா? நான் யாழ்ப்பாணத்திற்குப் புதிசு.” என்ற வார்த்தைகள் அவனுக்கு வயிற்றிலே பாலை வார்த்தது போல் இருந்தன. அவளது பெயர் காயத்ரி என்பதையும் நீண்ட காலத்திற்குப் பிறகு கொழும்பில் இருந்து குடும்பத்தோடு யாழ்ப்பாணத்திற்கு வந்ததாகவும் அறிந்து கொண்ட ரூபன் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டான். புது இடத்தில் சக மாணவன் அறிமுகமான மகிழ்வில் அவளும் சிரித்து விடைபெற்றுக் கொண்டாள்.

வழமை போலப் பின் வாங்கிலே நண்பர்களுடன் சேர்ந்து கொண்ட ரூபனுக்கு பாடத்தில் மனம் செல்லவில்லை.சிலவாங்குகளுக்கு முன் இருந்த அவளது சிரிப்பிலே மனதைப் பறிகொடுத்த அவன்என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தைத் தொலைத்து விட்டேன்என்று மீண்டும் கனவுலகத்தில் சஞ்சாரிக்கத்தொடங்கினான். எந்தப் பெண்ணும் அவனை இந்த அளவு பாதித்ததில்லை. சாதாரணமாக அவன் பெண்கள் பின்னால் அலையும் ரகமும் இல்லை.

டேய் கிளாஸ் முடிஞ்சுது மச்சான்! என்ன பலத்த யோசனை?”என்ற நண்பன் மாறனுடைய அழைப்புடன் நனவுலகத்திற்குத் திரும்பினான். வெளியே வரும்போது ”Excuse me! உங்கடை நோட்ஸ் ஒருக்காத் தருவீங்களாகாயத்ரி தான்.ரூபனுக்கு கசக்கவா போகிறது!! நோட்சை வாங்கிக் கொண்டு சிட்டாகப் பறந்தாள் அவனது சைக்கிள் தேவதை. ”என்ன மச்சான் ! கதை இப்படிப் போகுதுஎன்ற மாறனைச் சமாளித்து விட்டு ரூபன் பல்சரை கிளப்பினான்.

நண்பர்கள் ஒன்று கூடும் விளையாட்டுத்திடல். நேரம் 6 மணி. “காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஓர் ஓளிவட்டம் தோன்றும்,” என்று வைரமுத்துவின் கவிவரிகளை மாறன் கவி உரைக்கரூபனுக்கு ஒளிவட்டம் தெரியுதா பார்!” என்று தினேஸ் வாரிவிட மற்றவர்கள் சிரிக்கத்தொடங்கினர். “என்ன மச்சான் முழிச்சுக்கொண்டே கனவு காணத் தொடங்கியிட்டாய். என்னது அங்கால பச்சைக் கொடியோஎன்றான் சேகர். “டேய் சும்மா நக்கலடிக்கிறியள்! நான் சீரியசா லவ் பண்ணுறன் மச்சான்இது ரூபன். ’டேய் கொழும்புப் பெட்டையள் பெடியளோட கதைக்கிறது சகஜமெடா ! நீ வீணாக் குழம்பி அவதிப் படப் போகிறாய்என்றது சேகர். “என்ன சொன்னாலும் எனது முடிவில் மாற்றமில்லைஎன்று கூறியவாறு அவ்விடத்தை விட்டு அகன்றான் ரூபன். ஓரிரு மாதங்களும் உருண்டோடின, ருபன்காயத்ரி பழக்கமும் வளர்ந்தது. நண்பர்களின் நக்கல்களும் தொடர்ந்தன.

மீண்டும் அதே இடத்தில் காயத்ரியின் நினைவுகளில் மூழ்கிப்போன ரூபனை பார்த்து தினேஸ்டேய் நீ என்னடா இப்படி மாறியிட்டாய், உண்மையிலேயே நீ லவ் பண்ணுறதா இருந்தா உப்பிடி மனசுக்க வச்சிருக்காதையடா! அப்புறம் இதயம் முரளி மாதிரித் தான் திரிய வேணுமெடா

அவளுக்கும் என்னில விருப்பம் இருக்க வேணும். இல்லாட்டி என்னோட மட்டுமேன் வந்து கதைக்கிறாள்!! நான் சொல்ல நினைச்சாலும் அவளைப் பார்த்தவுடன எனக்கு சொல்ல வாறதெல்லாம் மறந்து போகுதெடா,! நான் என்ன செய்யஇது ரூபன்.

தினேஸ்எது எப்படியோ கெதியாச் சொல்லிப் போடு, இல்லாட்டி ஏலெவல் முடிஞ்சாப்பிறகு அவளைக் காணக் கிடக்காது,அவளை மிஸ் பண்ண வேண்டி வரும்! பிறகு கவலைப்பட்டு வேலையில்லை

ரூபனும் முடிவு செய்து விட்டான். அன்று தனது காதலை எல்லாம் ஒரு கடிதத்தில் உருகி உருகி எழுதினான். வகுப்பறையில் மனம் செல்லவில்லை. பாட இடைவேளை முடியும் நேரம்,ஆசிரியரும் வகுப்பிற்கு வரும்போது எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டான். அவள் அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவளது முகமாற்றத்தில் தெரிந்தது. ஆனால் ஒன்றுமே பேசாமல் கடிதத்தை வாங்கிக் கொண்டாள்
.

ரூபனுக்கு தலைகால் புரியவில்லை. அவள் ஒன்றும் பேசவில்லை என்பதை தனது காதலை ஏற்றுக்கொண்டதாக அர்த்தப் படுத்திக் கொண்டு கனவுகளில் சஞ்சரிக்கத் தொடங்கினான்.

வகுப்பு முடிந்ததும் அவனிடம் வந்த காயத்ரிமிஸ்டர், நான் உம்மிடம் சாதாரணமாய்த்தான் பழகினேன்,அதை நீங்கள் காதல் எண்டு நினைச்சா உம்முடைய தப்பு. இப்ப நீர் படிச்சு இஞ்சினியராய் வரப் பாரும். எனக்கு உம்மில காதல் இல்ல, இது உம்மட லெட்டர், நீரே வச்சுக் கொள்ளும்எனக் கூறி லெட்டரை அவனிடமே கொடுத்து விட்டுச் சென்றாள்
.

ரூபனுக்கு காலுக்கு கீழே பூமி ந்ழுவுவது போலிருந்தது.”காதல் காயங்களே ! நீங்கள் ஆறுங்களே!!!”எங்கிருந்தோ காற்றிலே மிதந்து வந்த பாடல் அவனது காதிலே பாய்ந்தது.