Tuesday, November 9, 2010

மறதி என்பது வரமா?


அறியாவயதில் அளவின்றி
அடம்பிடித்து
அப்பாவிடம் அடி வாங்கி
அழுதழுது தேம்பிய நாட்களில்
மறதி ஒரு வரம் தான்!!!

பாடசாலை நாட்களில்
நண்பனுடன் முரண்பட்டு
பல நாட்களின் பின் மீண்டும்
பழகும் போதும்
மறதி ஒரு வரம் தான்!!!

காதலைச் சொல்லப் போய்
காதலியிடம் செருப்படி வாங்கி
கவிழ்ந்திருந்து அழுத நாட்களில்
மறதி ஒரு வரம் தான்!!!

துஸ்யந்தன் சகுந்தலையை
மறந்திருக்காவிடின்
நமக்கு ஏது சாகுந்தலம்?
மறதி ஒரு வரம் தான்!!!

மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல்
சில நிகழ்வுகள்!!

புரியாத பிரியம்
பிரியும் போது தான்
புரியும்!!!
ஏதோ புரிகிறது!!!

காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன எல்லை
யார் சொன்னது???
காற்றுக்கும் வேலியுண்டு
பலமான முள் வேலி!!!

 நாமெல்லாம் அதில்
சிக்கிக்கொண்ட சருகுகளாய்!!!

2 comments:

  1. மறதி எப்போதும் வரம்தான்!!


    நட்புடன்...
    "நந்தலாலா" இணைய இதழ்,
    nanthalaalaa.blogspot.com

    ReplyDelete
  2. வேதனைகளின் சுவடுகள் நிறைந்த கவிதை!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    வாருங்கள்: www.nathikkarail.blogspot.com

    ReplyDelete